சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபான் வெய்குயி (வயது 62) என்ற முதியவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக விரக்தியில் இருந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டு மைதானத்தின் வெளியே பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களின் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்தினார். இதில் 35 பேர் பலியான நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த படுகொலையை நிகழ்த்தியதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.