இ.கம்யூ., நாகை எம்.பி எம் செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “சிறு வயது முதலே கம்யூனிஸ்ட் கட்சியில் ஆர்வம் கொண்டவர். 1989, 1996, 1998 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது மறைவுக்கு தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் செங்கொடி அரை கம்பத்திற்கு பறக்க விட கேட்டுக் கொள்ளப்படுகிறது” என கூறியுள்ளார்.