கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "பெங்களூருவில் எதிர்பார்த்த அளவை விட அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.