ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க, சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது, ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.