மும்பை ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெய் பிரவீன் சாவ்தாவும், ஷிவ்ஜீத் சுரேந்திர சிங் ஆகியோர், ஒருவரைக் கொன்று, அவரது சடலத்தை சூட்கேஸில் எடுத்துச் செல்ல முயன்றனர். ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பி அதிகாரிகள் ஸ்டேஷனில் சோதனை செய்து கொண்டிருந்தபோது சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டனர். குற்றவாளிகள் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.