வீல்சேரில் அமர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடக்க இருக்கிறது. இதற்கான வலை பயிற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிவில்லியர்ஸ், அவர்களை போல் வீல்சேரில் அமர்ந்து விளையாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.