DC அணிக்கு 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது PBKS அணி. டாஸ் வென்ற DC அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த PBKS அணி பேட்டர்கள் DC பௌலிங்கை துவம்சம் செய்தனர். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டானிஸ் 44* மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் 32 ரன்கள் விளாசினர். DC தரப்பில் முஸ்தபிசூர் 3, விப்ராஜ் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.