நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர்கள் முகமது - மைமூனா தம்பதி. கடந்த 16ஆம் தேதி வீட்டின் சமையலறையில் மைமூனா மர்மமாக இறந்துகிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மைமூனாவின் மருமகள் மற்றும் அவரின் தங்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாமியார் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் செல்லும் நோக்கத்திற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.