கேரளாவின் ஆலப்புழாவில் மாமனார் வீட்டில் இருந்து 14 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் ஒரு வருடத்திற்கு பிறகு மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். சாபு கோபாலன் என்பவரது மனைவி, கோபிகாவை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். 2024 மே மாதம் படுக்கையறையின் அலமாரியில் இருந்து வளையல்கள், நெக்லஸ், தாலி ஆகியவை திருடப்பட்டன. மற்றொரு உறவினரின் நகை காணாமல் போன வழக்கில் போலீசார் கோபிகாவிடம் விசாரித்துள்ளனர். இரு வழக்குகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்த நிலையில், கோபிகா திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.