நாமக்கல் மாவட்டம் முக்கிய சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் சிலர், நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து அட்டூழியம் செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கண்ட போலீசார், சட்டென அங்கு எண்ட்ரி கொடுத்தனர். இதனைப் பார்த்த இளைஞர்கள், அங்கிருந்து பைக்குகளில் ஏறி தெறித்து ஓடினர். இதுகுறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.