லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான நடன கலைஞர்

34063பார்த்தது
கர்நாடக மாநிலம் உடுப்பியில் இன்று காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல யக்ஷகானா நடன கலைஞர் பிரபாகர ஆச்சார்யா (62) மற்றொரு நபருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அம்பகிலு பெரம்பள்ளியில் இருந்து மெயின்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது லாரி ஏறியது. சக்கரத்தில் சிக்கி பிரபாகர ஆச்சார்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி