வெடித்துச் சிதறிய சிலிண்டர்.. 2 சிறுவர்கள் பலி (வீடியோ)

52பார்த்தது
டெல்லி: சுந்தர் நக்ரி பகுதியில் உள்ள சிஎன்ஜி சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று (மே.31) மாலை பழுதுபார்க்கும் பணியின் போது, ​​ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், ராஜா (3), சகீப் (7), அப்பாஸ் (9), மற்றும் அர்ஷத் (22) ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ராஜா (3), சகீப் (7) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி