தூத்துக்குடி மாவட்டம் அருகே இயங்கி வரும் பேக்கிரியில் வாங்கிய கேக்கில், நீலமான தலைமுடி இருந்ததைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எட்டையாபுரம் ரோட்டில் செயல்பட்டு வரும் ‘பிளாக் பாரஸ்ட்’ என்ற பேக்கிரியில், மோகலிங்கம் என்பவர் தனது குழந்தைகளுக்காக பிஸ்கட், கேக்குகளை வாங்கியுள்ளார். அதனை பிரித்துபார்த்தபோது கேக்கில் முட்டை ஓடுகள், தலைமுடி ஆகியவை இருந்துள்ளன. இதுகுறித்து பேக்கரியில் கேட்டதற்கு முறையான பதிலளிக்காததால் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.