வீட்டை இடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தொழிலாளி தற்கொலை
திருவேற்காடு அடுத்த கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டதாக வந்த தகவலில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 1600 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தெரியவந்தது. அங்கு வசிக்கும் சங்கர் (44) என்ற தொழிலாளி, தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் நேற்று (நவ. 18) தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.