விருத்தாசலம்: மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியை சேர்ந்த பஞ்சநாதன் மனைவி செல்வி இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.