கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணாநகர் கபிலர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை காவல் துறையினர் கைது செய்து மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.