அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.