வேப்பூர்: இலவச கண் சிகிச்சை முகாம்

54பார்த்தது
வேப்பூர்: இலவச கண் சிகிச்சை முகாம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேப்பூர் ரோட்டரி சங்கம், வேப்பூர் ஆசிப் பிரியாணி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை ரோட்டரி சங்கத்தின் 22 ஆவது மண்டலத்தின் உதவி ஆளுநர் ஜி.எம். தாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். இதில், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பங்கேற்று கண் சம்பந்தமான பாதிப்பு உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி