கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் ஆதி பாலி கிளினிக் மருத்துவர் தமிழரசி தலைமையில் இதய மருத்துவர் இளையராஜா, பல் மருத்துவர் லஷ்மண பாரதி அய்யப்பன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பள்ளி நிர்வாகி அன்புக்குமரன் தலைமையில் ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் முகாமைத் தொடங்கிவைத்தார். இதில் ரோட்டேரியன்கள் கார்த்திக், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.