கடலூர் மாவட்டம் மங்களூர் தெற்கு ஒன்றியம் கொரக்கவாடி ஊராட்சி கொ. குடிகாடு கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் திறந்து வைத்து குடும்ப அட்டைக்கான பொருட்கள் வினியோகத்தினை துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.