கடலூர்: 1, 831 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு

60பார்த்தது
கடலூர்: 1, 831 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு
தமிழக மக்களவைத் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் பொருட்டு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே போல தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்களும் தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 11, 754 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 1, 831 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி