விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

1934பார்த்தது
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மயிலம் புது காலணியை சேர்ந்தவர் அருண்குமார் வயது 25. இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அருண்குமார் பணிபுரிந்து வந்தார். இவர் கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்ட வேண்டும் என்று மேலாளர் திட்டவட்டமாக கூறி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த அருண்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருன்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருங்கின்றனர்.

தொடர்புடைய செய்தி