கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் ரேவதி வயது 19 பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் இவருக்கும், சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 7. 2. 2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரேவதி வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை காணாததால் இது குறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.