கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வேப்பூர் அடுத்த சிறுகரம்பலூர் ஊராட்சியில் மின்சார வாரியம் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் வழியாக அப்பகுதியில் உள்ள வீடுகள், குடியிருப்புகள், வாசிகள் மற்றும் விவசாயிகள் மின்சாரம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இக்கம்பத்தின் தோல் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். ஏதேனும் ஆபத்து நடப்பதற்கு முன் இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.