கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லமுத்து அதே ஊரில் உள்ள அய்யனார் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வரும் நிலையில் இந்த நிலையில் செல்லமுத்து நேற்று அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த செல்லமுத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த விருத்தாசலம் ரெயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.