கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயதுடைய 9 ஆம் வகுப்பு மாணவி இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று திடீரென மாணவியின் காலில் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவரது தாய், சிகிச்சைக்காக திட்டக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் சிறுமி 10 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய அதே ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.