பட்டாகுறிச்சி: மதுபாட்டில்கள் விற்ற கணவன்.. மனைவி கைது

79பார்த்தது
பட்டாகுறிச்சி: மதுபாட்டில்கள் விற்ற கணவன்.. மனைவி கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் காவல் துறையினர் பட்டாகுறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல் முருகன் மற்றும் அவரது மனைவி மீனா ஆகிய இருவரும் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி