பைக் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி

1102பார்த்தது
பைக் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஐவதக்குடி கிராம பகுதியைச் சேர்ந்தவர் பாவாடைராயன் வயது 65, தந்தை பெயர் நாராயணசாமி. இவர் டிஎன் 15 எ 5890 என்ற என் கொண்ட டீவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐவதக்குடி ஜங்சன் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டிஎன் 85 சி 1312 என்ற என் கொண்ட ரெனால்ட் டஸ்டர் கார், இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தவிபத்தில் பாவாடைராயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இத்தகவலறிந்து வந்த வேப்பூர் போலிசார் இறந்தவரின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி