இருசக்கர வாகனம் எது கார் மோதி விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 50 தந்தை பெயர் வீரமுத்து, மாங்குளம் ரெட்டாக்குறிச்சியை சேர்ந்த ராதா வயது 37 தந்தை பெயர் மூக்கன் ஆகிய இருவரும் வேப்பூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு டி என் 15 எம் இ 6114 என்ற எண் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் விருத்தாச்சலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டாக்குறிச்சி அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிஎன் 02 ஏ எஃப் 9379 என்ற எண் கொண்ட ஷிப்ட் கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு காயம் பட்ட ராதாவை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.