பெண்ணாடம் அடுத்த துறையூரைச்
சேர்ந்தவர் லட்சுமி (இவர் பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலம்- திட்டக்குடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.