மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. புடையூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் சரண்யா, வட்டாட்சியர் அந்தோணி ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், முன்னாள் சேர்மன் கேஎன்டி சுகுணாசங்கர், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், அடரி சின்னசாமி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள், கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்