திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் திட்டக்குடி தொகுதி இளமங்கலத்தில் NLC India நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜையில் அடிக்கல் நாட்டினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.