அரசு மதுபான கடை ஊழியர் அமைச்சர் கணேசன் இடம் கோரிக்கை மனு அளித்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஏ. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி தந்தை பெயர் சின்னசாமி இவர் வேப்பூர் கூட் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையின் 26 85 எண் கொண்ட கடையில் இரண்டு ஆண்டுகளாக விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரோடுகலியன், நாகராஜ், செல்வம், காசி வேல், ராஜாராம்
இந்தக் கடையில் கடந்த 20 9 2023 அன்று தணிக்கை ஆய்வாளர் ஆய்வு செய்துள்ளார் அப்போது அவர் கணக்குகளை சரிவர பார்க்காமல் எங்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு தணிக்கை ஆய்வாளர் ரூபாய் 42000 குறைவாக உள்ளது என்று எழுதிவிட்டு சென்றுள்ளார்.
இந்தக் கடையில் எந்த கணக்கிலும்பணம் குறைவாக இல்லை கணக்குகள் அனைத்தும் சரியாக வைத்திருக்கிறோம் என்றும் கடையில் பணிபுரிந்த ஆறு தொழிலாளர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் 6 தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்காமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் இடம் கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் இவர் அரசு மதுபான கடைத் துறையில் சுமார் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.