ஶ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

71பார்த்தது
ஶ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள. நல்லார் பாலாஜி மேல்நிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. 

விருத்தாசலம், ரோட்டரி கிளப், ஆதி பாலி கிளினிக் மற்றும் நல்லூர் ஶ்ரீ பானுமதி அம்மாள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாம் நல்லூர் ஶ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

முகாமிற்கு, விருத்தாசலம், ரோட்டரி கிளப் சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
ரோட்டரி கிளப் செயலாளர் பரமசிவம், பராஜக்ட் செயலர் காரத்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்லூர் ஶ்ரீ பாலாஜி மேல்நிலைப் பள்ளி தாளாளர் அன்புக்குமரன் வரவேற்றார்.  விருத்தாசலம் ஆதி பாலி கிளினிக் மருத்துவர் தமிழரசி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முகாமில் இருதய மருத்துவர் இளையராஜா, பல் மருத்துவர் லட்சுமண பாரதி, பொது நல மருத்துவர் அய்யப்பன் ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பாலாஜி மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சிகிச்சை வந்த பொதுமக்களுக்கு உதவியாக செயல்பட்டனர் முகாமில் இசிசி, ரத்த அழுத்தம், ரத்தக்குழாய் அடைப்பு, மாதவிடாய் கோளாறு, கர்பப்பை பிரச்சனை, சர்க்கரை, நுரையீரல் உள்ளிட்டவைக்கு இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி