கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் அடுத்த பெ. பொன்னேரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் விவசாயி இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான வயலுக்கு சென்றார். பின்னர் விவசாய பணியில் ஈடுபட்ட பெருமாள் தண்ணீர் குடிப்பதற்காக வரப்பு மீது ஏறி நடந்து வந்தார். அந்த சமயத்தில் வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பி பெருமாளின் கழுத்தில் உரசியதாக தெரிகிறது.
அப்போது மின்சாரம் தாக்கி பெருமாள் தூக்கி வீசப் பட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் துறையினர் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.