கஞ்சா வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது

876பார்த்தது
கஞ்சா வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் கீரப்பூர் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்ததில், 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் புடையூரை சேர்ந்த பால்ராஜ் (வயது 32) என்பதும், அவர் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்த மிஸ்டர் டீனுபையா என்கிற டீனுபையாவிடம் (வயது 22) கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதில் கைதான டீனுபையா மீது வேப்பூர் போலீஸ் நிலையத்தில் 2 கஞ்சா வழக்கு, விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 2 கஞ்சா வழக்கும் என மொத்தம் 4 கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு டீனுபையாவை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் டீனுபையாவை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபாரி டீனுபையாவிடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி