கடலூர்: 240 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

64பார்த்தது
கடலூர்: 240 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடலூா் மாவட்டத்தில் கடலூா், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூா், விருத்தாசலம் ஆகிய வட்டங்களில் உள்ள 240 மையங்களில் 95, 350 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குரூப் - 4 தோ்வு காலை 9. 30 மணி முதல் பிற்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் காலை 8. 30 மணிக்குள் வர வேண்டும்.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு மற்றும் ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தோ்வுக் கூடத்துக்கு கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி