கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்ததொழுதூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி மோகன், கேஜிஎம்டி பள்ளி நிர்வாகி, செல்வா அறக்கட்டளை நிறுவனர் ஜெய கண்ணன், ஊ. ம. த குணசேகரன், ஊ. ம. து. த அன்சார் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
இதில் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.