கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் கோவிந்தசாமி என் பவருக்கு சொந்தமான 20 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் நேற்று இரவு மான் ஒன்று தவறி விழுந்தது.
பின்னர் தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில், இரவு நேரத்தில் மானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மான் வனவர் ராம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.