கடலூர் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பெரியகங்கணாங்குப்பத்தில்
அமைக்கப்பட்டு வரும் சென்டர் மீடியனால் அப்பகுதியினர் நீண்ட தூரம் சென்று திரும்பி வர வேண்டி உள்ளது என்று கூறி நேற்று மாலை திடீரென அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் சிலர் சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்காக கட்டப்பட்டிருந்த கம்பிகளை சாலையின் நடுவே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.