கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் இன்று காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை நடவடிக்கை எடுக்க என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.