பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஷ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர்கள் முரளி, செந்தில்குமார் ஆகியோர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிநவீன தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதனை பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.