தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முடிந்து பண்ருட்டி கெடிலம் ஆற்றுப்பகுதியில் ஆற்றுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை இன்று 30.12.2024 பண்ருட்டி நகரமன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் துவக்கி வைத்தார். திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.