பண்ருட்டி நகராட்சி கடலூர் சாலை சென்ட்ரல் பேங்க் எதிரில் ரயில் நிலையத்துக்கு செல்லும் மூன்றாவது பாதையில் வாலாஜா வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்காக இன்று 10.6.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி பிரபு, பண்ருட்டி ரயில்வே உபயோகிப்பார்கள் சங்க தலைவர் சுபாஷ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.