டெல்லி ஜங்புராவில் மதராஸி கேம் பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மதராஸ் கேம்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் விரும்பும் பட்சத்தில், தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் பூர்விக பகுதியில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.