பண்டைய தமிழர்கள் மேற்கொண்ட பல்வேறு கடல் பயணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவ்வாய்வுகள் மூலமாக தமிழர்களின் பெருமைமிகு வரலாற்றை பல்வேறு தரவுகள் மூலமாக நிறுவிய அய்யா ஒரிசா பாலு அவர்கள் புற்று நோயின் காரணமாக மரணமடைந்தார் என்கின்ற செய்தி அதர்ச்சியளிக்கிறது, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.