பண்ருட்டி: கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது

70பார்த்தது
பண்ருட்டி: கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோவில் முன்பு உள்ள உண்டியலை வாலிபர் ஒருவர் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடினார். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். 

பொதுமக்கள் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிபிடித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில் அவர் பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் சக்திவேல் என்பதும் கோவில் உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணத்தை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி