பண்ருட்டி: கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

75பார்த்தது
பண்ருட்டி: கடை உரிமையாளரை தாக்கியவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கானாங்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தேவராயர் இவர் மேல்மாம்பட்டில் பர்னீச்சர்பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் ஈஸ்வரகிருஷ்ணன் என்பவர் கடையில் இருந்த தேவராயருடன் வீண் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் அங்கிருந்த மரச்சட்டத்தை எடுத்து தேவராயரின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வர கிருஷ்ணனைஈஸ்வரகிருஷ்ணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி