கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.