"பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரேவதி (எ) நிவேதா (வயது 17). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்